இந்தியாவின் தமிழ்நாடு என்ற மாநிலத்தில் உள்ள முடசல் ஓடை என்ற கிராமத்தில், காற்று அடித்துக் கொண்டிருந்த டிசம்பர் மாத மதிய வேளையில், மீனவர் பெண் அனுசுயா இந்திரகுமார் தனது வழக்கமான பணியான மீனை உலர வைப்பதில் ஈடுபடாமல், கூரை வேய்ந்த வீட்டின் முன் முற்றத்தில் தனது பதின்ம வயது மகளுக்கு அவசரமின்றி மெதுவாக சடை பின்னி விட்டுக் கொண்டிருக்கிறார்.
அருகாமையில் அவரது கணவர் அறுந்து போன வலைகளை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு தெரு நாய் சிதறி கிடக்கும் மீந்த உணவை தின்று கொண்டிருக்கிறது. கடல் அலைகள் தாள லயத்துடன் கடற்கரையின் மீது மோதி கொண்டிருக்கின்றன. ஒரு மயில் அகவிக் கொண்டு, உணவைத் தேடி அலைகிறது.
அமைதியான மனநிலை என்பது அனுசுயாவுக்கு புதிதாக உள்ளது. பொதுவாக காலையில் மீனை விற்பது, மதிய வெயிலில் வெயிலில் மீதமுள்ளவற்றை உலர வைப்பது, தெரு நாய்கள் அல்லது திருடுவோரிடமிருந்து அதை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக காவல் இருப்பது என தொடர்ந்து வேலையில் ஈடுபடும் அனுசுயாவுக்கு ஒரு நொடி ஓய்வு கூட கிடைக்காது.

புதிய ஒரு உள்ளூர் முன் முயற்சிக்கு நன்றி உரித்தாகுக…தகிக்கும் சூரிய வெப்பத்தையும், அடை மழையையும் வெட்ட வெளியில் எதிர்கொள்வதற்கு பதில், அவர் தற்போது ஒரு சூரிய ஒளியால் இயங்கும் உலர வைப்பானில் தனது மீனை காய வைக்க முடியும்.
உள்ளூர் மொழியில் கருவாடு என்று அழைக்கப்படும் ட்ரை ஃபிஷ் (dry fish) இந்தியா முழுவதும் சுவைத்து உண்ணப்படும் ஒரு சுவை மிகுந்த உணவுப் பொருளாகும். இது பெரும்பாலும் குழம்பாகவோ அல்லது தொட்டுக்கொள்ளும் உணவாகவோ சாதத்துடன் பரிமாறப்படுகிறது. ஆனால் உலர வைக்கும் செயல் போக்கானது, வழக்கமாக உலர்ந்து கொண்டிருக்கும் மீனை பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ள பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் மீன்களை உலர வைக்கும் அதேசமயம், ஆண்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று விடுகின்றனர்.

அனுசுயா தனது 36 வயதையும் விட அதிக வயதானவர் போல தோற்றமளிக்கிறார். அவரது இடையறாத உழைப்பால் அவரது தோல் மிகவும் கருத்துப் போயுள்ளதுடன், கண்களைச் சுற்றி சுருக்கங்களும் . தோன்றியுள்ளன. மீனை பாரம்பரிய முறையில் உலர வைக்கும் வேலையில் இரண்டு பத்தாண்டுகள் கழித்துள்ள ஒருவருக்கு, இந்த நேரத்தை மிச்சம் செய்யும் கருவி நிச்சயம் வரப்பிரசாதம் தான்.
“ அதிகாலை 4 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை நான் ஒரு கோப்பை தேநீரை மட்டும் அருந்தி உயிர் வாழ்ந்து வந்தேன். காலை அல்லது மதிய உணவை உண்பது என்பதை சிந்தித்துக் கூட பார்க்க முடியாதது. அந்த அளவிற்கு எனது வேலை கடுமையாக இருந்தது.”
2021 டிசம்பரில், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியும் இணைந்து அனுசுயாவின் கிராமத்தில் உலர வைக்கும் செயல் போக்கை தானியங்கி மயமாக்க, ஐந்து சிறிய மற்றும் ஒரு நடுத்தர அளவு கொண்ட சூரிய ஆற்றல் உலர வைப்பான்களை நிறுவினர். இது கிராம மக்கள் பாரம்பரிய முறையை விடவும் மேலும் சுகாதாரமான, சுத்தமான மற்றும் மக்களை ஈர்க்கும் கருவாட்டை விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

இது இந்தியாவில் முதல்முறையாக இந்த வகையில் செய்யப்பட்டுள்ள நீடித்த தொழில் நுட்பம் ஆகும். அறக்கட்டளையானது இந்த சூரிய ஆற்றல் உலர வைப்பான்களை அருகாமையில் உள்ள நகரமான பூம்புகாரில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவி மகத்தான விளைவுகளை பெற்றது.
“அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான வேல்விழி, “சூரிய ஆற்றல் உலர வைப்பான்கள் மீனை சுகாதாரமான முறையில் உலர வைக்கின்றன. முன்பு கருவாட்டின் தீவிர நாற்றத்திற்காக அதை தவிர்த்த நுகர்வோர் தற்போதைய செயல்முறையில் உருவாகுமா கருவாட்டை விரும்புகிறார்கள். சூரிய ஆற்றலால் உலர வைக்கப்பட்ட கருவாடுகள் ஒரு மிதமான ருசியை தருவதுடன் மூன்று மாதங்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கின்றன.” என்று கூறுகிறார். “ இந்த முன் முயற்சியானது ஒரு புதிய நுகர்வோர் அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் அறக்கட்டளையானது மீனவ மக்களின் ஆதரவோடு மீனவப் பெண்களின் வீடுகளில் இவற்றை நிறுவுவதன் மூலம் இதை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.”என்று மேலும் அவர் கூறுகிறார்.
அதிகமான வருவாய்க்கான மூலாதாரம்
அனுசுயா பொதுவாக கடலில் இருந்து பிடிக்கப்பட்டு வந்துள்ள மீன்களை சந்தையில் விற்பதற்காக மூலம் காலை 4 மணிக்கு தனது வேலையை தொடங்கி விடுகிறார்.
“பெரும்பாலான நாட்களில் கடலில் இருந்து எனது கணவர் பிடித்து வந்த மீன்களை விற்பேன். மீன் குறைவாக பிடிக்கப்படும் போது நான் இதர மீனவர்களிடமிருந்து மீனை வாங்கி சந்தையில் விற்பேன்” என்று அவர் கூறுகிறார்

மீன்பிடிப்பு குறைவாக உள்ள போது, மீன்களை உலர வைப்பது குடும்பத்திற்கான வருமானத்திற்கு இன்னொரு ஆதாரமாக விளங்குகிறது. அந்த மாதம் குடும்பத்தை நடத்த இது உதவி செய்கிறது. “மாதத்தில் 15 நாட்களுக்கு மட்டுமே என்னுடைய மீனவக் கணவன் திருப்திகரமான மீன் பிடிப்போடு வீடு திரும்புகிறார்” என்று அவர் கூறினார்.
கருவாட்டை தயாரிக்க கிராமப் பெண்கள் உள்ளூர் மீன் வகைகளான நெத்திலி, காரா, வாழை,கானாங்கெளுத்தி போன்றவற்றை வாங்குகின்றனர். அவற்றை உப்பு தண்ணீரில் 10 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கின்றனர். அதன் பிறகு உப்பு நீரில் ஊறவைத்த மீனை சூரிய ஆற்றல் உலர வைப்பானில் வைக்கின்றனர். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் மீனை திருப்பிப் போடுகின்றனர். பொதுவாக அடுத்த நாள் மதியம் அவை உலர்ந்துவிடும். ஒருவேளை உலராவிட்டால் அவை இன்னும் ஒரு நாள் உலர வைப்பானில் வைக்கப்படுகின்றன.

சூரிய உலர வைப்பான்கள் வசதியாக இருந்தாலும், பாரம்பரிய உலரவைப்பு முறைகளோடு ஒப்பிடும்போது, அவை கருவாட்டின் எடையை பெருமளவு குறைத்து விடுகின்றன. பாரம்பரியமாக ஒரு கிலோ கருவாட்டை உற்பத்தி செய்ய பெண்கள் 2.45 கிலோ (5.4 பவுண்டு) மீனைப் பயன்படுத்துகின்றனர்; ஆனால் அதே அளவு கருவாட்டை சூரிய உலர வைப்பானில் தயாரிக்க கிராமப் பெண்களுக்கு 4 கிலோ மீன் (8.8 பவுண்டு) தேவைப்படுகிறது.
இருந்த போதும் கூட இந்தப் புதிய முறை, ஒரு புதிய நுகர்வோர் அடித்தளத்தின் (பேரங்காடிகள்) விளைவாக லாபத்தை கொண்டு வருகிறது.
பாரம்பரிய கருவாட்டில் ஈரம் இருப்பதானது, அதைப் பொட்டலமாக கட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஏனெனில் அது மிக விரைவாகவே கெட்டுவிடும். “ முன்னர் வார சந்தைகள் தான் ஒரே விற்பனை புள்ளியாக இருந்தன. மேலும் விற்கப்படாத கருவாடு 5 வாரங்களுக்குப் பிறகு கோழி பண்ணைகளுக்கு மிகக் குறைந்த விலையான கிலோவுக்கு 50 ரூபாய் ( 0.58 $)-க்கு அனுப்பப்படும்” என்று 15 ஆண்டுகளுக்கு மேல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் A. சத்யா என்ற கிராமவாசி கூறினார்.

“ முன்னர் எங்களது கருவாடு மிகுந்த நாற்றம் கொண்டதாக இருந்ததால், பேரங்காடிகளின் உரிமையாளர்கள் எங்களோடு வியாபாரம் செய்வதை தவிர்த்து வந்தனர். தற்போது நான் ஒரு கிலோ கருவாட்டை பேரங்காடியில் 550 ரூபாய்க்கு (6.36$) விற்பனை செய்கிறேன். உள்ளூர் கடைகள் வழங்குவதை விட இது இரண்டு மடங்கு அதிகத் தொகையாகும்.” என்று இந்தத் தொழிலில் மூன்று வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் எஸ் வளர்மதி கூறினார்.
அவரது கணவரின் மரணத்திற்குப் பின்னர் அவரது நிலையான வருவாய்க்கான ஒரே வாய்ப்பு சூரிய ஆற்றல் கருவாட்டின் மூலமாகத்தான் வந்தது.” நான் கடலில் பிடிக்கப்படும் மீன்களை விற்பதை எனது முதன்மை வருவாயாக கொண்டுள்ளேன். ஆனால் கருவாடு ஒரு கூடுதல் வருவாய் ஆதாரமாக விளங்குகிறது” என்று அவர் கூறினார். வளர்மதி ஒரு வாரத்திற்கு 10 கிலோ கருவாட்டை 6 ஆயிரம் (70$) விற்கிறார். இது அவரது வார வருவாயில் பாதி ஆகும்.

சுகாதாரம் மற்றும் செல்வத்தை நோக்கிய ஒரு தீர்வு
மீன் உற்பத்தி பொருட்களில் மிகவும் விலை குறைந்த ஒரு பண்டமான கருவாட்டில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், புரோட்டீன்கள், அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள், பல்வேறு வகைப்பட்ட தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. உலகளாவிய கருவாட்டு பொருளியல் ஆனது உணவு பாதுகாப்பு, சத்துணவு மற்றும் வணிகத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை நீண்ட காலமாக வகித்து வருகிறது.
பனிக்கட்டியை உருவாக்கும் தொழில்நுட்பங்களும், குளிர்சாதன சங்கிலிகளும் தோன்றுவதற்கு முன்னால் மீன் பண்டங்களில் வியாபாரம் செய்யப்பட்டு நுகரப்பட்ட முக்கிய வடிவமாக கருவாடே இருந்து வந்தது”. என்று 2022 ஆம் ஆண்டின் ஆய்வின் ஆசிரியர்கள் எழுதினார்கள்.
இருப்பினும் பாதுகாப்பற்ற முறைகள் சுகாதார கேடுகளுக்கு வழி வகுக்க் கூடும். உலக அளவில் செய்யப்பட்ட பல ஆய்வுகள் மீனுக்கான பாரம்பரிய வெட்ட வெளி உலர வைக்கும் முறையானது அடிக்கடி பூச்சி மருந்து எச்சங்கள், அடர் உலோகங்கள், நுண்ணுயிரிகள், பாதரசம் போன்றவை கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓமன் நாட்டில் திறந்த வெளிக் கடற்கரையில் மத்தி மீனை வெளிப்புற வெப்பத்திற்கு ஏற்ப ஏழு நாட்கள் வரை உலர வைப்பதானது, கருவாட்டில் குறிப்பிடத் தகுந்த இழப்புகளுக்கு (30-40%) இட்டுச் செல்கிறது என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.
தட்பவெட்பம், தூசு, மாசுபடல் மற்றும் விலங்குகளின் தலையீடு போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். மேலும் அதே ஆய்வானது சூரிய கருவாடானது “ வெட்ட வெளியில் உலர வைக்கப்படும் கருவாட்டை விட உலர வைப்பு நேரம், பதம் ஆகியவற்றில் மேம்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறுகிறது.
சூரிய உலர் மீன் பாரம்பரிய கருவாட்டை விட குறைவான வெளிப்புற ஈரமும் உப்பும் கொண்டுள்ளதால், அது ஒரு மேலான சுகாதார மாற்று ஆகும்.” நாங்கள் பாரம்பரிய கருவாட்டில் 500 கிராம் உப்பை பயன்படுத்தும் இடத்தில் சூரிய உலர வைப்பான்களில் வெறும் 100 கிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது”. என்று சத்யா கூறினார்.
ஆனால் இந்த தொழில்நுட்பம் தனக்கே உரிய சவால்களையும் கொண்டுள்ளது. உலர வைக்கும் செயல் போக்கில் வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்பும் பெண்களுக்கு (சூரிய உலர வைப்பான் அமைந்துள்ள முற்றமானது சூரிய தகடுகளால் உருவாக்கப்படும் தீவிரமான வெப்பத்தைக் கொண்டுள்ளதால்) வெப்பத்திலிருந்து விடுதலை கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறை வெளியே செல்ல வேண்டி உள்ளது.

“வயதான பெண்கள் வெப்பத்தின் காரணமாக செயலிழந்து போகின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு குறைவாகவே வேலை உள்ளதால் எங்களால் அதைச் செய்ய முடிகிறது”என்று சத்யா கூறுகிறார்.
இந்தத் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானியான வேல்விழி மீனவப் பெண்கள் வெளித்தள்ளும் மின்விசிறிகளை தமது முற்றத்தில் பயன்படுத்துவதில்லை. இவை வெப்பத்தை குறைக்க உதவும்.நாங்கள் இவ்விஷயம் குறித்து அவர்களுக்கு கல்வி அளித்து வருகிறோம். விரைவில் இது ஒழுங்கு படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.
தெற்காசியாவை உள்ளிட்ட பல பகுதிகளில் மீனை உலர வைக்கும் உழைப்பாளர்களில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சூரிய ஆற்றல் உலர வைப்பான்கள் போன்ற பயனுள்ள கருவிகளை அணுக முடியாத பெண்களுக்கு, இந்த வேலை உடல் ரீதியாக கடினமானதாகவும் பெரிய அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

சத்யா தனது குழந்தைகளை பராமரிக்க போதுமான நேரம் இல்லாததால், அவர்களை உண்டு-உறை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார். வளர்மதியின் மகள் பெரும்பாலான சமயங்களில் தனது தாயை இரவு நேரத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது என்று மனம் வருந்தினாள். அனுசுயா காலை நாலு மணிக்கு தனது அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன் தனது குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காக,தனது தூக்கத்தை ஏறத்தாழ எப்போதும் தியாகம் செய்தார்.
ஆனால் இப்போது மீன் உலர வைக்கும் செயல்பாடானது தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பெண்கள் ஒரு வழியாக தாம் இழந்து விட்டிருந்த மணி நேரங்களைத் திரும்பப் பெற்று வருகின்றனர். இதன் மூலம் தமது குழந்தைகளுடன் தம்மை மேலும் பிணைத்துக் கொள்கின்றனர். அவர்களால் தமக்காக சிறிது கூடுதல் நேரத்தை செலவிட முடிகிறது.